search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர்கள்"

    • கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்
    • சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 5-வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இணைச்செயலாளா் ஜெயந்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளா் முருகேசன் திட்ட அறிக்கையையும், பொருளாளா் ராஜேஸ்வரி வரவு- செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.இதை தொடா்ந்து, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் பள்ளிகளில் அமல்படுத்தும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட தலைவராக ஜெயந்தி, செயலாளராக மாசிலாமணி, பொருளாளராக தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா்களாக விஜயலட்சுமி, தெய்வானை, சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

    • சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி இன்று காலை கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 132 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருணம மண்டபத்தில் அடைத்தனர்.

    • சத்துண ஊழியர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
    • ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்க ளை நிரப்பிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துண ஊழியர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர்கள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, இணை செயலாளர்கள் நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.

    இதில் கலந்துகொண்ட சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவுறையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சிவ ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ரங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்ட செயலாளர்கள் தமிழ் மாறன், அஜய்ராஜ், துறை தணிக்கை மற்றும் மாநிலத் தலைவர் அம்பேத்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.

    • சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர்.

    பொன்னேரி:

    பள்ளிகளில் காலை உணவு திட்டம் மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, செயலாளர் லதா, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வு ஊதியம் ரூ.8,750 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

    இதற்காக நர்சு ஒருவர் வந்து இருந்தார். அவர் சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்தார். பின்னர் சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கூறும்போது, இந்த ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க உள்ளோம். அவர் வாங்க மறுத்தால் முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.

    • மதுரை வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம், காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமை தாங்கினார். மூர்த்தி, பிச்சையம்மாள் முன்னிலை வகித்தனர். ராஜகுமாரி வரவேற்றார்.

    டி.என்.ஜி.ஏ. தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார். இதில் பானு, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் கார்த்திகை லட்சுமி நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது.
    • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி நடந்த இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    நிர்வாகிகள் உதயகுமார், நாஞ்சில் நதி, ரிச்சர்ட் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைத்தலைவர் கவிதா, துணை செயலாளர் பிரபா ராணி, செயற்குழு உறுப்பினர் லூயிஸ் மேரி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

    காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.

     கோவை,

    கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக சத்துணவு ஊழியர்கள் தமிழகத்தில் முதல் முதலாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.

    இதில் சத்துணவு ஊழியர்கள் அரசு பணியாளராக கருதி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சமும் வழங்க வேண்டும், முதல்வரின் காலை சிற்றுண்டி தயாரிப்பை சத்துணவு ஊழியருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி ஒன்றிய பொறுப்பாளர் சிவகாமி ஒன்றிய தலைவர் வசந்தி ஆகியோர் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ராமசாமி, சத்துணவு உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுல்தான் பேட்டையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு கொடுக்காமல் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும், தனியாருக்கு கொடுக்கும் விலையை விட சத்துணவு ஊழியருக்கு குறைவான தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே அதை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

    • ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, செல்வி, மஞ்சுளா , சபானா, ஆஸ்மி, மணிமேகலை, சாந்தி, கவுரி, கொடிமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். பாஸ்கர் பாபு தொடக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய துணை செயலாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி அனைத்து பள்ளிகளிலும் துவங்குவதால் அதனை சமைத்து காலையில் உண்ணும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்.

    அதை மதிய உணவு சமைக்கும் நிரந்தர அமைப்பாளர்கள், சத்துணவு பணியாளர்கள் அனைவரும் காலையில் நடக்கும் சம்பவத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால் அதையும் நாங்களே சமைத்து தருகி–றோம். எங்களுக்கு சம்பளத்தினை உயர்த்தி எங்களையே நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    • சத்துணவு ஊழியர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர். புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். கேரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சீத்தாலெட்சுமி பேசினார். ஊர்வலத்தை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா பேசினார். தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது வழங்கப்படும் பணிக்கொடையை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.

    • ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவைகளை வழங்க கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிக்க கோரியும் உள்பட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் முத்து வெள்ளையப்பன் தலைமை தாங்கினார். தமிழ்செல்வி வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணைத் தலைவர் கணேசன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராஜ்குமார், சாலை பணியாளர் சங்கம் சார்பில் கருமலை, நூலகத் துறை சார்பில் ராஜகுரு உள்பட பலர் பேசினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் நிறைவு உரையாற்றினார். பேரூராட்சிகள் துறை சார்பில் மணிகண்டபிரபு நன்றி கூறினார். ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ×